இந்திய அரசியலில், தேர்தல் வியூக நிபுணர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் இந்திய அரசியல் ஆலோசனைத் துறையில் புதிய நெருக்கடிகளும் உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிகளைத் தாண்டி, வேட்பாளர்களாக களமிறங்க விருப்பப்படுவோர் தேர்தல் வியூக நிபுணர்களின் உதவியை நாடலாம். அவர்களுக்கான கட்டுரையும் இது.
நாய்கள் கண்களுக்கு எமன் தெரிவானா? நாய்கள் ஊளையிடுவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?
வீட்டில் நாய்கள் ஊளையிட்டால் தவறு நடக்கும் என்று ஏன் கூறுகின்றனர்? நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலிலும் சரியான காரணத்தை வைத்திருப்பார்கள், அது போல் ஏதாவது உண்டா? அல்லது அறிவியல் ரீதியாக ஏதாவது காரணம் உள்ளதா? அல்லது மூட நம்பிக்கையா?
வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்! தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்! 18 பெண்களுக்கு நிவாரணம் வழங்க அதிரடி உத்தரவு!
1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பல மணி நேர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
மாரிதாஸ் கைதை கடுமையாக கண்டிக்கிறேன்! நாங்கள் என்னதான் பேசுவது? சீமான் ஆவேசம்!
தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டிவிடும் திமுக! சிவா எம்.எல்.ஏ. கையிலெடுக்கும் ‘தட்டாஞ்சாவடி ஃபார்முலா’!
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வரும் தேர்தலுக்காக, திமுக மாநில அமைப்பாளரும்(தெற்கு), எம்.எல்.ஏ.வுமான சிவா போடும் கணக்கால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! திமுக அரசு மதப்பிரச்சனைகளை உருவாக்குகிறது!
சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்!
மாம்பழங்களில் சுமார் 500 வகைகள் உள்ளன. இந்தப் பழங்களில் பல்வேறு சத்துகள், நன்மைகள் உள்ளன. ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகப்படுத்த உதவும் வைட்டமின் ‘ஏ’ மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது.