சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
சபாநாயகரே கேள்விகளுக்கு பதில் சொன்னால், அமைச்சர்களுக்கு என்ன வேலை? எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், 110 விதியின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என அறிவித்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரும் வழக்கு! சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.
எப்படியிருக்கு ஆன்டி இண்டியன்? மத அடிப்படைவாதிகளை பிரித்து மேய்ந்திருக்கும் புளூ சட்டை மாறன்!
திரைப்படங்களை அதன் தன்மையறிந்து தனக்கே உரிய பாணியில் வறுத்தெடுக்கும் ப்ளு சட்டை மாறன் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்.’ படத்தின் தலைப்பே சர்ச்சயை ஏற்படுத்துவதைப் போல இருந்தாலும், கதைக்களமும் அது பேசிய வெளிப்படையான அரசியலும் நேர்மையானது, எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாதது.
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் திட்ட மாவட்ட அளவிலான பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமனம் செய்யும்போது, ஆசிரியர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி பின்பற்றப்படவில்லை.
‘பீஸ்ட்’ படத்திற்கு அடுத்த பின்னடைவு! குவைத்தைத் தொடர்ந்து மற்றொரு நாட்டிலும் திரையிடத் தடை!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை திரையிட குவைத்தில் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது கத்தாரிலும் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என KSR விமர்சனம்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் அரிவாளால் வீடேறி வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, பள்ளி கல்லூரிகளில் சாதி, மத பாகுபாடுகள் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இதில் ஆய்வுகளை மேற்கொண்ட சந்துரு, 20 பரிந்துரைகள் அடங்கிய 650 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார்.
