கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.
அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!
சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அரசு ஊழியர்களை பழிவாங்கும் திமுக அரசு! வட்டார வள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த சீமான் வலியுறுத்தல்!
“வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.
லாக்அப் டெத்? புளியங்குடி இளைஞர் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்! தென் மாவட்டங்களில் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உள்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர் தனது உறவினர் ஒருவருக்கு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சப்ளை செய்ததார் என கடந்த 11-ம் தேதி புளியங்குடி காவல்நிலைய எஸ்.ஐ. பரமசிவம் உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.