எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் 2,381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.
ஓபிஎஸ் பொருளாளர் பதவியும் பறிபோகிறது! துரோகத்தின் அடையாளம் என ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. பின்னர் நிலையில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத் தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது” என்றார்.
எல்கேஜி., யுகேஜி சேர்க்கைக்கு மறுப்பு! அரசுப் பள்ளிகளை நாடும் பெற்றோர் ஏமாற்றம்! அதிகாரிகளால் தடுமாறும் கல்வித்துறை!
தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த 2019-ல் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கும், அக்னிபாத்-க்கும் என்ன வித்தியாசம்? சங்கங்கள் கொந்தளிப்பு!
தமிழ்நாடு முழுவதும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும்போது, தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது மத்திய அரசின் ”அக்னிபாத்” திட்டத்திற்கு, தமிழக திராவிட மாடல் அரசு சான்றளித்தது போல் ஆகிவிடும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
இனி ஓபிஎஸ் மாஜி ஒருங்கிணைப்பாளர்! உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது! சி.வி. சண்முகம் அதிரடி!
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ தவிர்க்க முடியாதது! ஓலா நிறுவன CEO கருத்தால் சர்ச்சை!
எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என ஒலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியிருக்கிறார்.
