வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.
வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே முதல்வருக்கு கவலை! சொத்து வரியை மத்திய அரசு உயர்த்தச் சொல்லவில்லை!
“நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்” என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
சான்றிதழ் காணாமல்போனால் NOC வழங்க புதிய நடைமுறை! ‘செல்ஃபோன் டவர் லொகேஷன்’ ஆய்வு செய்ய முடிவு!
ஆவணம், வாகனம், சான்றிதழ்கள் காணாமல் போனால், தடையில்லா சான்றிதழ் பெற ‘செல்ஃபோன் டவர் லொகேஷன்’ அவசியம் என்ற புதிய நடைமுறையை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
ஹோட்டல்களில் நாளை முதல் விலையேற்றம்! ஜெட் வேகத்தில் எகிறும் பெட்ரோல், டீசல் விலை!
கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இலங்கை அமைச்சரவை ராஜினாமா! ராணுவம் ஆட்சியைப் பிடிக்கவும் வாய்ப்பு எனத் தகவல்!
இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. அதிபர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர். அமைச்சரவை ராஜினாமாவை இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உறுதி செய்துள்ளார்.
‘பீஸ்ட்’ டிரெய்லர் எந்தப் படச்சாயலில் உள்ளது? யோகி பாபுவின் கூர்காவா?, மணி ஹெய்ஸ்ட்டா? நெட்டிசன்கள் விவாதம்!
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும்நிலையில், சில படங்களின் சாயல் படத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! பின்னணியில் ராணுவ தளபதிகள்! 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு!
பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.