அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால், அதாவது வரும் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக்கருதி 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை எதிரொலி! ஆட்டோ கட்டணம் உயர்கிறது! ஐகோர்ட் உத்தரவு!
“பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிமனை இருக்கா? உங்களுக்கு 100% வரி! தமிழக அரசின் அடுத்த அடி!
சொத்துவரியை தொடர்ந்து காலிமனைக்கான வரியையும் தமிழ்நாடு அரசு 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவிப்பு!
மோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்! Amazon, Flipkartக்கு போட்டியாக வழங்கப்படும் ஆஃபர்கள்!
ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை டாடா குழுமம் உருவாக்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.
ராகுல்காந்தி பொய் சொல்கிறார்! பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடுமையான விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி முதலில் தன்னைப்பற்றி கவலைப்படட்டும் என்று ராகுல் காந்திக்கு கூர்மையான பதிலடி கொடுத்துள்ள உ.பி. முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி, ராகுல் காந்தி தனது கட்சிக்கு(BSP) கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக சாடியுள்ளார்.