தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
அவர் மீது ஒரு கண் வையுங்கள்! இந்திய அணிக்கு அவர் தேவை! யாரைச் சொல்கிறார் கவாஸ்கர்?
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏமாற்றம் நிறைந்ததாக அமைந்தது. முழங்கால் காயம், அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை, இதற்குப் பின் கொரோனா என அடுத்தடுத்து உடல்ரீதியான பிரச்னைகளால் அவதிப்பட்டார் நடராஜன். இதனால், கடந்த ஐபிஎல்லில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜனால் ஆட முடிந்தது.
புதுச்சேரி மக்களிடம் அமித் ஷா சபதம்! கறுப்புக் கொடி போராட்டத்தை புறக்கணித்த திமுக!
அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு சென்றிருந்த அமித் ஷா, காலையில் பாரதியார் நினைவு இல்லத்திற்கும், அரவிந்தர் ஆசிரமத்துக்கும் சென்றிருந்தார். அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார்.
தமிழக அரசு கூறுவது பொய்! வெறும் 800 மெ.வா. பற்றாக்குறைதான் மின்வெட்டிற்கு காரணமா? சீமான் கண்டனம்!
மத்திய தொகுப்பில் இருந்து தரவில்லை என்று தமிழக அரசு கூறும் 800 மெகா வாட் மின்சாரம்தான், மொத்த மின்வெட்டிற்கும் காரணம் என்பது உண்மைக்குப் புறம்பானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹிந்தியும் இருக்கட்டும்…! புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி அமல்படுத்தும் தமிழ்நாடு அரசு!
தமிழக அரசின் பாடத்திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
மின்வெட்டுக்குக் காரணம் என்ன? அரசுக்கு முன்யோசனை இல்லையா? என்ன சொல்கிறார் எடப்பாடி?
மின்வெட்டு தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.
