உலக அளவில் கடல் மட்ட உயர்வு மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சுதலால் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் சென்னை உட்பட ஐந்து முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Singapore’s Nanyang Technological University) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்கேஜி., யுகேஜி சேர்க்கைக்கு மறுப்பு! அரசுப் பள்ளிகளை நாடும் பெற்றோர் ஏமாற்றம்! அதிகாரிகளால் தடுமாறும் கல்வித்துறை!
தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த 2019-ல் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
சரிவிகித உணவு முறையால் நீரிழிவு குறைபாட்டை தடுக்க முடியுமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்லும் காரணங்கள்..!
‘சரிவிகித உணவு‘ என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மருத்துவக் கட்டுரைகளில் தவிர்க்க முடியாத வாசகமாகவும் இது இருக்கிறது. ஆங்கிலத்தில் Balanced diet என்று சொல்லப்படும் இதன் முக்கியத்துவம்தான் என்ன?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவதன் அவசியத்தை விளக்கும் ஐபெட்டோ !
எந்தவித பிடித்தமும் மேற்கொள்ளாமல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முட்டேஷன் (Commutation – ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒப்பளித்து பணம் பெற்றுக்கொள்ளுதல்) போன்ற பலன்களைக் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக UPSஐ ஒருக்காலும் ஏற்க முடியாது என்பதை ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS(AIFETO) சார்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்கிறோம் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு! வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வரும் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும், பம்பர் to பம்பர் என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் முதல் மாதம் ‘தை’யா? ‘சித்திரை’யா? அம்பலப்படும் திராவிடவியலாளர்களின் புரட்டு! வேல்ஸ் பார்வை!
3 Minutes Read :- தை மாதம்தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என திமுக அரசு மீண்டும் அறிவிக்க உள்ளது. தி.க., திமுக–வினர் வழக்கம்போல இதை ஏற்றாலும், சித்திரையை ஒதுக்க முடியாமலும், தைத் திங்களை ஏற்க முடியாமலும் தமிழ் மக்கள் திணறுகிறார்கள்.
