மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக தெரகிறது.
காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் ரெய்டு! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி கண்டனம்!
முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது.
அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை கைவிட்டார் தினகரன்! முடிவை சொல்லாமல் சசிகலா சஸ்பென்ஸ்!
அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.
பிளாஸ்டிக் கழிவுகளை வலி நிவாரணிகளாக மாற்றும் அசாதாரண உயிரி தொழில்நுட்பம்! – சுற்றுசூழல் புரட்சிக்கு வித்திடும் விஞ்ஞானிகள்!
உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் முக்கியமானவை. ஆனால், இவை பெரும்பாலும் குறைந்துவரும் புதைபடிவ எரிபொருட்களை (fossil fuels) நம்பியே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற, எடின்பர்க் பல்கலைக்கழக(University of Edinburgh’s Wallace Lab) ஆராய்ச்சிக் குழு, புதிய மாற்று வழியைக் கண்டறிந்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல்: உலகளாவிய அணு பேரழிவுக்கு வழிவகுக்கும் புதிய போர் முறை!
2025 ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் நடத்திய ஈரான் அணு வசதிகளுக்கான தாக்குதல், உலக அரங்கில் ஒரு “அணு உச்சநிலைப் போர்” (Nuclear Threshold War) என்ற புதிய மோதல் வரையறையை உருவாக்கியுள்ளது. இந்த மோதல் வெறும் பிராந்திய முரண்பாடு அல்ல; அணு ஆயுதப் பரவல், தடுப்பு தாக்குதல்கள், மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்களின் சிதைவு ஆகியவற்றுக்கான ஆபத்தான முன்மாதிரியாக மாறியுள்ளது.
அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கடும் உயர்வு! கண்காணிப்புக் குழுவுக்குத் தெரியுமா என பாமக கேள்வி?
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
