திருவள்ளூர் அருகே பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், நிறுவனத்திற்கு செல்லும் சாலையை சாலையை சேதப்படுத்தியதாக கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவியின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமான தேவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடக்கம்! முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு செலுத்தத் திட்டம்!
ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஓரங்கட்டப்படும் கனிமொழி ஆதரவாளர்கள்! மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்ற எம்.எல்.ஏ.! மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ. பூங்கோதை, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையறியாமல், கட்சித் தலைமை கண்டித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமானது! ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!
நாடு முழுவதும் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சட்டமன்ற இருக்கை விவகாரம்! சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு!
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
