சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கட்சித் தலைமையை இடித்துரைக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அரசு நிர்வாகங்களில் சர்ச்சுகளின் தலையீடு இருப்பதாகக் கருதும் அவர், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பீங்கான் பாத்திரங்களை உபயோகிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! Ceramic Cookware’s Top Health Benefits!
பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் ‘செராமிக்’ எனப்படும் ‘பீங்கான்” பாத்திரங்கள் பலரது தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பீங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிமு 9000-10000 முதலே பீங்கான் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.
சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தி.மு.க., மற்றும் திராவிடக் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் மீது வழக்குகள் பதிவது, சிறையிலடைப்பது எனத் தொடர் அடக்குமுறைகள் நடந்து வருகின்றன. இதை மேலும் கூர்தீட்டும் விதமாக, தமிழகத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்குச் சாவு மணி அடிக்கும் விதமாக சமூக ஊடகக் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டு, அதற்கு திமுக ஆதரவாளர் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: எதிர்பாராத திருப்பம்! கியர் மாறும் குடும்பக் கட்டுப்பாடு!
ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!
டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தியது. 1,338 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதினர்.
