Saturday, February 14, 2026
Home Blog Page 369

தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாமா? நிபுணர்களின் பதில் என்ன?

ஆரோக்கிய வாழ்விற்காக தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை போதுமானதா? மருத்துவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையா? என்ற கேள்விகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உணவுப்பழக்கங்களால் தேவைப்படும் சத்துகள் குறைவாக கிடைப்பதால், பலரும் வைட்டமின் மற்றும் தாதுக்களால் நிரம்பிய சப்ளிமென்டுகளை தினசரி எடுத்துக்கொள்கின்றனர்.

மின்டெல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் வழக்கமாக வைட்டமின் மாத்திரைகள் அல்லது சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் தங்களிடம் எந்த சத்துப் பற்றாக்குறையும் இல்லாதபோதும், உடல்நலம் மேம்படுமேனும் நம்பிக்கையோடு இதை பயன்படுத்துகிறார்கள்.

Also Read : நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?

 வைட்டமின் மாத்திரைகள் – உண்மையான தேவை இருக்கிறதா?

13 அடிப்படை வைட்டமின்கள் நம் உடலுக்கு தேவை. அவற்றை உணவிலிருந்து பெற முடியாதபட்சத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வது ஆலோசிக்கப்படுகிறது. எனினும், இதற்கான மருத்துவ பரிசோதனை இல்லாமல் எடுத்துக்கொள்ளுவது பல நேரங்களில் தேவையற்றதும், இடையூறு உண்டாக்கக்கூடியதுமான முடிவுகளை தரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 வைட்டமின்களின் வகைகள்:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: A, D, E, K – உடலில் சேமிக்கப்படுவதால் அதிக அளவில் எடுத்தால் சிக்கல்கள் ஏற்படலாம்.

நீரில் கரையும் வைட்டமின்கள்: B குழு, C – சேமிக்கப்படாது. தேவையை விட வைட்டமின் சி அதிகமாக எடுத்தால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

Also Read : வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects

 உணவிலிருந்து கிடைப்பதே போதுமானதா?

பல்வேறு வகையான மல்டிவைட்டமின் மாத்திரைகள் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களையும் கொண்டிருப்பதால், உணவிலிருந்தே இவை கிடைக்கவில்லையெனில் மாத்திரைகள் ஒரு மாற்றுத் தேர்வாக இருக்கலாம்.

உதாரணமாக:

  • கால்சியம் – தினமும் 700 mg தேவை.
  • துத்தநாகம் (Zinc) – ஆண்களுக்கு 9.5 mg, பெண்களுக்கு 7 mg தேவை.
  • இரும்புச்சத்து – பெண்களுக்கு 14.8 mg, ஆண்களுக்கு 8.7 mg தேவை.

❖ யாருக்கெல்லாம் சப்ளிமென்ட் தேவைப்படும்?

  • வயதானவர்கள், வீட்டிலேயே இருப்பவர்கள் – வைட்டமின் D மற்றும் கால்சியம்.
  • சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் – B12 மற்றும் கால்சியம்.
  • பசி குறைவோடு வலுவிழந்தவர்கள் – மல்டிவைட்டமின் மாத்திரைகள்.
  • மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்கள் – இரும்புச்சத்து (மருத்துவரின் ஆலோசனையுடன்).
  • கர்ப்பிணிகள் – ஃபோலிக் அமிலம் (மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில்).

❖ வைட்டமின் சி – உண்மையான சூப்பர் ஹீரோவா?

வைட்டமின் C ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகளால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என நம்பப்படுவதாலும், காய்ச்சல், சளி போன்றவற்றை தடுக்கும் என சொல்லப்படுவதாலும், மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை தொடர்பான நிரூபணங்கள் மிகவும் குறைவானவை. ஒரு நெல்லிக்காயில் 100-600 mg வரை விட்டமின் சி இருக்கிறது. இதனால், இயற்கையான பழங்கள், காய்கறிகள் மூலம் தினசரி தேவையைப் பெற முடியும்.

Also Read : மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்!

 Bottom Line:

நிபுணர்கள் கூறுவதாவது:

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், விட்டமின் D தவிர மற்ற அனைத்தும் உணவிலிருந்து பெற முடியும்.
  • உணவில் சிலவற்றை தவிர்ப்பவர்கள், குறிப்பிட்ட சத்துக்களுக்கு மாத்திரை எடுக்கலாம்.
  • தவிர, ஒரே மாத்திரையால் எல்லா சிக்கல்களும் தீரும் என்பது தவறான எண்ணம்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த சப்ளிமென்டும் தொடர்ந்து எடுக்க வேண்டாம்.

சுயமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைவிட, சமச்சீர் உணவுப்பழக்கத்துடன், நிபுணர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவதே நீண்டகால ஆரோக்கியத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

உங்க அப்பாவாலயே ஒன்னும் பண்ண முடியல! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி! 

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி தேர்ச்சி சதவிகிதம்! அறிவுத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தனி மதிப்பீட்டு முறை! மனநல மருத்துவர்கள் ஆலோசனை!

கல்வி என்பது வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கும், சம்பாதிப்பதற்குமான ஒரு ஊடகம். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள். ஏனெனில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!

“பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் (LKG, UKG) வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இன்டோர் ஸ்டேடியத்தை மட்டும் திறக்க அனுமதித்தது யார்? நிர்வாக அதிகாரியின் முறைகேடுக்கு துணைபோகிறதா புதுச்சேரி அரசு?

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் மட்டும் விளையாட அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி, வெளி விளையாட்டு அரங்கில் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள் விளையாட்டு அரங்கம் எனப்படும் இன்டோர் ஸ்டேடியம் மூலம் கொரோனா பரவாதா என்பதே வீரர்களின் கேள்வியாக உள்ளது.

antalya bayan escort