ஒரு முறை உபயோகித்து விட்டு தூக்கி எறியக் கூடிய பால்பாயிண்ட் பேனாக்களை பெரும்பாலானோர் விரும்பி உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பால்பாயிண்ட் பேனா ஒரு ரூபாய்க்குக் கூட கிடைக்கிறது. வீட்டிலிருந்து பேனா எடுத்துச் செல்ல மறந்து விட்டாலும், ஒரு ரூபாய்க்கோ, 2 ரூபாய்க்கோ பேனா வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம். இன்று நாம் சர்வசாதாரணமாய் உபயோகிக்கக் கூடிய பால்பாயிண்ட் பேனாக்களை உருவாக்க பலர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
பென்சில் வரலாறு தெரியுமா? கண்டுபிடிக்கப்பட்டு இத்தனை நூறு ஆண்டுகளா ஆகிறது?
அன்றாடம் பயன்படுத்தும் பென்சிலின் தமிழ் பெயர் கரிக்கோல். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழுதுவதற்கும், குறிப்பு எடுக்கவும், வரைவதற்கும் பென்சிலையே பயன்படுத்துகிறார்கள். என்னதான், வகை வகையான பேனாக்கள் வந்து விட்டாலும் கூட பென்சிலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. பென்சில் என்ற பெயர் பென்சிலியம் என்ற லத்தின் வார்த்தையில் இருந்து சுருங்கி பென்சில் என்றானது.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை! ஆளுநரின் பங்கு குறித்து ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இணைய வழி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க வைக்கும் பிள்ளைகளின் பெற்றோர், என அனைவரின் இதயத்து உணர்வுகளை தெரியப்படுத்தவே இந்த வேண்டுகோள் கடிதம்.
சூடா ஒரு டீ; கூடவே ஒரு ‘தம்’! 15 வகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து! Health risks of tea and cigarette combination!
சூடான தேநீர் மற்றும் சிகரெட் காம்பினேஷன் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன, அவற்றை ஒன்றாக உட்கொள்வது ஆபத்துகளை அதிகப்படுத்தும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
அரிசி நமக்கு ஆற்றலை அளிப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் அதை ஊறவைப்பது நமது உடல் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பலருக்கு தெரியாது. மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல நவீன கிச்சன் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.
நெய்யில் ஊறவைத்த பேரீச்சம்பழம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பேரீச்சம்பழத்தை நெய்யில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
மீல் மேக்கர் வெச்சு இப்படியொரு குருமாவா? வேற லெவல் டேஸ்ட்! டிரை பண்ணுங்க..!
காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு கிரேவி அல்லது குருமாவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்குடியவாறு இருக்கும்.
