இனி மோடி அரசை அண்டி இருந்தால் மட்டுமே ’ஆட்சி பிழைக்கும்’ என்ற நிலை உருவான பின்பு, எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பணிந்தும், குனிந்தும் நடக்க திமுகவினர் ஆயத்தமாகி விட்டதையே இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் படத்திறப்பு விழா வெளிப்படுத்துகிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்திருக்கிறார்.
அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்! கடத்தல் மாஃபியாக்களுக்கு வழித்தடமான தமிழகம்! கண்காணிப்பை வலுவாக்குமா அரசு?
போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்கள் தமிழகத்தை வழித்தடமாக பயன்படுத்தும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!
3.30 Mins Read : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசுர பலத்துடன் களம் கண்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், திமுக அலையால் படுதோல்வி அடைந்தார். நாடு முழுவதும் பாஜகவுக்கு சறுக்கல் என்றாலும், புதுவை தோல்வியை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க திட்டம்! இலங்கையின் அதிர்ச்சியூட்டும் முடிவு!
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து செயற்கை கீழ்க் கரையமைப்புகளை உருவாக்க இலங்கையின் மீன்வளத்துறை (Department of Fisheries and Aquatic Resources – DFAR) பரிந்துரை செய்துள்ளது. இது மீனவளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசு கூறினாலும், இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் உரிமை மற்றும் மீன்வள சிக்கல்களில் இது மேலும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஐபெட்டோ வலியுறுத்தல்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தீவிரம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!
சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
