4 Min(s) Read: ’ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்தத் துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை’ என்று கதறினார்கள் எக்கியார்குப்பம் கிராம மக்கள். பொம்மை முதலமைச்சர் தலைமையிலான திராவக அரசின் கையாலாகத்தனத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மறைக்க, மடைமாற்ற முரசொலி விஷம அரசியலை செய்கிறது.
இலை, தழைகளை கட்டிவிட்டு ஆசிரியைகளை நடனமாட வைத்ததால் சர்ச்சை! பள்ளிக் கல்வித்துறை செயலுக்கு குவியும் கண்டனங்கள்!
இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை நடத்தி விட்டார்கள். அச்சடித்த புத்தகத்தையே கையில் எடுக்காமல் நடத்தினார்கள். வாசிப்புத் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் பேச வேண்டுமானால் இதுதான் உண்மை.
ரூ. 2000 நோட்டை திரும்ப பெறுகிறது ரிசர்வ் வங்கி! செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லும்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
சென்னையில் அதிகரிக்கும் மின்வெட்டு! அமைச்சரின் ‘அடடா’ விளக்கத்தால் அதிர்ந்துபோயுள்ள தலைநகர்வாசிகள்! தூக்கமின்றி தவிப்பதாக வேதனை!
தலைநகர் சென்னையில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தகிக்கும் வெயிலால் மக்கள் திணறி வரும் நிலையில், தலைநகரின் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியிருப்பதாக சமூகவலைதளங்களில் சென்னைவாசிகள் புலம்புகின்றனர்.
அரசுக்கு பெரும் தலைவலியாக மாறும் போலி மது, ஸ்பிரிட், மெத்தனால்! சாராய பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 22-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்?
தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது! திமுகவின் கைக்கூலிகளாக மாறிய சமூகப் போராளிகள், நடிகர்கள்! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
கள்ளச் சாராயம் அருந்தி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்தவும், தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
