கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை.
மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம்! முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய ஐகோர்ட்!
இந்திய மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரபு வழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்வதை ‘Crosspathy’ என அழைக்கிறார்கள்.
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா! பிரதமர் பங்கேற்றது மிகப்பெரிய பெருமை! முதல்வர் பேச்சு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய பிரதமர், “அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்களின் மனங்களில் ஏற்கெனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மீண்டும் ONGCக்கு தாரைவார்க்க முயற்சி! தமிழக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த விதமான தொழிற்சாலைகளுக்கும், புதிதாக எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் உள்ளிட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை! செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் நடப்பது பெருமையாக உள்ளது.
இந்தியாவின் சதுரங்க சக்தி தமிழகம்! சதுரங்க வல்லபநாதர் கோவிலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு!
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “மிகக் குறைந்த காலத்தில் ஒலிம்பியாட்டுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவின் சிறப்பம்சமாகும். உலகின் பழமையான மிகச் சிறந்த வரலாற்றை கொண்டது தமிழகம்.
