சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சராகிறார் நமச்சிவாயம்! அமித் ஷாவின் ‘மிஷன் சவுத்’! பாஜக போட்டுள்ள அடடே பிளான்!
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அங்கு பாஜக எப்படி ஆட்சியை அமைத்து என அனைவருக்கும் தெரியும். எனவே தென்மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த ‘மிஷன் சவுத்’ என்ற திட்டத்தை பாஜக கையிலெடுத்துள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு தடை! அவசரச் சட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பு!
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஆசிரியர்கள் முதல் அதிகாரிகள் வரை கடுமையான மன அழுத்தம்! உயிர் பலியும் ஏற்படுவதால் கல்வித்துறையில் கலக்கம்!
எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. எண்ணும் எழுத்து பயிற்சி ஒன்றும் இராணுவப் பயிற்சி அல்ல. இந்தப் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் ஆசிரியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது கொடுங்குற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!
“பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் (LKG, UKG) வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மலக்குடல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு! மருத்துவ உலகில் புதிய மைல் கல்!
மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
த்ரில்லர் காட்சிகளுடன் ‘சுழல்’ வெப் சீரிஸ்! பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என நட்சத்திர பட்டாளங்கள்!
இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
