Tuesday, January 27, 2026
Home Blog Page 243

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக்காட்டி தீட்சிதர்கள் எதிர்ப்பு! ஆய்வு நடத்த முடியாமல் அரசு ஏமாற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை மூட முடிவு! ஏழை, அடித்தட்டு பெற்றோர் பாதிப்பு!

ஏழை அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கிடும் வகையில், முந்தைய அதிமுக அரசு 2019-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளான LKG, UKG வகுப்புகளை தொடங்கியது. 2019-2020ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! போலீஸ் இல்லாததால் கூச்சல் குழப்பம்! வெயிலில் தவித்த வாகன ஓட்டிகள்!

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, கடந்த 3-ஆம் தேதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக திமுக நிர்வாகிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மண்ணில் புதைந்த பேருந்து! மூச்சுத் திணறும் குழந்தை! போராளியாக நயன்தாரா! மிரட்டும் ‘O2’ டிரெய்லர்!

நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”. பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜென்டில்மேன் – 2! இவரா டைரக்டர்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கே.டி. குஞ்சுமோன்!

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் – ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பங்காரு அடிகளார்? 8-ந் தேதி அகற்ற தமிழக அரசு முடிவு!

ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

antalya bayan escort