உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலிருக்கும் கியான்வாபி மசூதியின் வெளிப்புற சுவர்களில் உள்ள இந்துக் கடவுள்களை வழிபட வேண்டி, இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியில் நடத்தப்பட்ட சோதனையில், சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் மசோதாவை அனுப்பியதற்கு நன்றி! 21 மசோதாக்களுக்கும் விரைந்து ஒப்புதல் தாருங்கள்!
சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
இந்து கடவுளர்கள் அவமதிப்பு! முழக்கம் எழுப்பியவர்களை தெரியவில்லை என்கிறது போலீஸ்!
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மதுரை காளவாசல் பகுதியில் கடந்த 29-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடத்தியது.
சிவபுராணம் பாடல் வரிகள்! திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டு துவங்கும் பதிகம்!
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தின! ஜுன் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு!
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து வங்கிகளும் வட்டியை உயர்த்தியுள்ளன. இதில் ஜூன்1ம் தேதி முதல் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை காயப்படுத்துவதா? வசந்திதேவிக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்து மூத்த கல்வியாளர் வசந்திதேவி எழுதிய கட்டுரைக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை, தலைமைச் செயலாளர் வெ. இறையன்புக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.
பாஜக மீது அதிமுக சரமாரி விமர்சனம்! பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு!
காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
