பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஒலிபரப்பானது. இது 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
திமுக அரசின் வணிக விரோத கொள்கை! இதுதான் திராவிட மாடலா? ஓபிஎஸ் கண்டனம்!
வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு கருத்து!
சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.
பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 2026-ல் பாமக ஆட்சி! பாமக 2.0 என்ற புதிய செயல்திட்டம்!
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் திருவேற்காட்டில் நடைபெற்றது.
உலக நாடுகளை அச்சப்படுத்தும் பொருளாதார மந்தநிலை! இந்தியா தப்பிக்குமா?
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும் வரும் நிலையில் தற்போது பல்வேறு நாடுகளும் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்! திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்கள்!
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது! மத்திய அரசு ஆய்வில் அதிர்ச்சி!
தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 720 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.
