Tuesday, January 27, 2026
Home Blog Page 260

பள்ளிக்கல்வி இயக்குநரகம் மனித உரிமையை மீறுகிறது! மாணவர்களை வதைக்கிறார்கள்! ராமதாஸ் கண்டனம்!

மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிடிவாதம் பிடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாதிக் கயிறு கட்டிக் கொண்டதில் மோதல்! 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு! நெல்லை அருகே பதற்றம்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்த முருகன் – உச்சிமாகாளி தம்பதியின் மகன் செல்வசூர்யா. இவர்களது மகள் பவித்ரா. இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வசூர்யா 12ம் வகுப்பில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

2022ன் முதல் சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?

இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது. இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசாசு 2 டீசர்! பெண்ணின் யோனியுடன் ஓவியம்! மிஷ்கின் வைத்துள்ள குறியீடு!

ஆண்டிரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ’பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெப் சீரிஸ் டைட்டில் அறிவிப்பு! அதிரடி வேடத்தில் விஜய் சேதுபதி! த்ரில்லர் கதைக்களம்!

சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்களான ராஜ் & டிகே(Raj and DK) இயக்கத்தில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கும் OTT சீரிஸுக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்ப அலை! மேலும் உயரும் என்கிறது வானிலை மையம்!

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. மார்ச் மாதமா? அல்லது மே மாதமா? என்கிற அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இயல்பான வெப்ப நிலையை விட 4.5℃ வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வரையறுத்துள்ளது (IMD).

1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பத்தை தீர்த்தது தமிழக அரசு!

கரோனா தொற்று பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக டிசம்பர் பாதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

கோப்புப் படம்

அண்மையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய குறிப்பாணையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும்” என்று அறிவித்துள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

மேலும், 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 1-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort