IPL 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
25 மாவட்டங்களில் வரும் 27-ந் தேதி அதிமுக அமைப்பு தேர்தல்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.
சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு! பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பு! விலை மேலும் எகிறும் என்பதால் மக்கள் அச்சம்!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருக்கிறது. அதேபோல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஹிஜாப் சர்ச்சை! பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்! தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி கைது!
பிரதமர் மோடி மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசிய திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி (43) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குளத்தை மூடி பஞ்சாபி தாபா நடத்திய திமுக பிரமுகர்! ரூ.10 கோடி மதிப்புடைய அரசு நிலம் மீட்பு!
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பஞ்சாபி தாபா ஹோட்டலை திமுக பிரமுகர் நடத்தி வந்துள்ளார். 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டுள்ளனர்.
பொய் வழக்கு போட்டு போலீஸ் துன்புறுத்துகிறது! கதறும் பழங்குடி மக்கள்!
திருட்டு வழக்குப் போட்டு போலீசார் துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
