சென்னையில் தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு! குற்றவாளிகளுக்கு நிவாரணம் தரக்கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்! `நீட்’ தேர்வு பலிபீடம்’! முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
“நீட் தேர்வு என்பதைவிட, அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
பொம்மை ஆட்சி செய்கிறார் ஸ்டாலின்! சைக்கிள் ஓட்டுவதை பார்க்கவா வாக்களித்தோம்? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
முதலமைச்சர் ஸ்டாலின் முதல் நாள் டீக்கடையில் டீ குடிப்பது போலவும், மறுநாள் நடைபயணம், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போல செய்தி வருவதாகவும், இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள் என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சிறைபிடித்த படகுகளை ஏலம் விடும் இலங்கை! 105 விசைப்படகுகளை இழப்பதால் கொந்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்களிடமிருந்து தங்கள் நாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 105 விசைப்படகுகளை இலங்கை ஏலம் விடுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
