ஒரு மாத ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்குப் பதிலாக, இனி 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த திட்ட விவரங்களை 60 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பாணியில் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த திமுக அரசு! அடிப்படை உரிமைகளை தடுக்கும் அளவுக்கு எதற்காக அச்சம்?
குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதிமுக-வை குறைகூறிவிட்டு, திமுக-வே தற்போது கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வது சரியா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொங்கல் தொகுப்பு குளறுபடியும் அரசின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி புனரமைக்கப்பட வேண்டும்! 2024ல் பாஜக-வை வீழ்த்துவது சந்தேகமே! பிரசாந்த் கிஷோர் கருத்து!
காங்கிரஸுக்கும் என் மீது 100% நம்பிக்கை கிடையாது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது, பாஜகவை வீழ்த்த காங்கிரஸை புனரமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணரும், ஐ பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டிவரும்! கவிஞர் வெண்ணிலாவை எச்சரிக்கும் விவசாயிகள்!
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் குறித்து கவிஞர் வெண்ணிலா தவறாக பதிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டி வரும் என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.
மாணவி தற்கொலை வழக்கு! வாக்குமூலம் வீடியோ எடுத்தவரை தொந்தரவு செய்யக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில், மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
