ஆகமம், சாஸ்திர, சம்பிரதாயங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார். நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டுமே அறிநிலையத்துறை கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
6 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும்! எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்லி எய்ம்ஸ் அறிவுறுத்தல்!
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். 2-வது அலையில் பாதிக்கப்படாதவர்கள், 3-வது அலையில் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது! தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள்!
சில அரசியல் தலைவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக நீட் தேர்வு குறித்து தவறான பிரசாரங்களையும், உறுதிமொழிகளையும் வழங்கி வருகிரார்கள், நீட் தேர்வை யாராலும் நிறுத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
‘நீட்’ விலக்கு பெற சாத்தியமில்லை! மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்! சுகாதாரத்துறை அமைச்சர் சூசகம்!
தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு அமலில் இருப்பதால், தேர்வுக்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை குறித்து டெல்லி எய்ம்ஸ் ஆய்வு! குழந்தைகளை அதிகம் பாதிக்காது என தகவல்!
கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடித்த வீரன் வாஞ்சிநாதன்! போஸுக்கு முன்னோடியாய் ஆங்கிலேயர்களை அலறவிட்ட வரலாறு!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜூன் 17, 1911 அன்று மிக முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
