மகாகவி பாரதியாரின் சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான சரவணகுமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கோலமாவு விநியோகித்த கலாம் சேவை மையம்! குடும்பப் பெண்களின் தியாகத்தை கவுரவிக்கும் முயற்சி!
புதுச்சேரியில், கலாம் சேவை மையத்தினர், மார்கழி மாதத்தையொட்டி, பல வண்ண கோலப்பொடி விநியோகித்தனர். கோலம் போடுவதன் பயன் என்ன என்பதற்கான அறிவியல் விளக்கத்தையும் அவர்கள் துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்தனர்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடக்கம்! முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு செலுத்தத் திட்டம்!
ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்தக வாசிப்பாளர்களுக்கு நற்செய்தி! கலவையாய் கையில் தவழ காத்திருக்கிறது ‘ஏழிலைப்பாலை’!
சித்த மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கும், வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் வாசித்தவர்களுக்கும் ‘ஏழிலைப்பாலை’ எனும் பெயர் பரிச்சயமாக இருக்கும். வாசிப்பில் காதல் கொண்டோரை மகிழ்விக்க, அதே பெயரிலான புத்தகம் பொங்கலன்று வெளியிடப்பட இருக்கிறது.
கேஸ் சிலிண்டர் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கொள்ளையோ கொள்ளை! தமிழ்நாட்டில் ரூ.95 கோடி, புதுச்சேரியில் ரூ.16 கோடி கூடுதல் வசூல்!
சமையல் கேஸ் டெலிவரி செய்யும்போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு பெறப்படும் இந்தத் தொகையில், டீலர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
எஸ்றா சற்குணம் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கத் திட்டம்! ஸ்டாலின் மன்னிப்புக் கேட்கவும் பாஜக வலியுறுத்தல்!
பிரதமர் பற்றி அவதூறு பேசிய எஸ்றா சற்குணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழக அரசு உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு! தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், “பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது. அரசுப் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என கூறினார்.
இருப்பாளி என்ற இடத்தில் பேசிய அவர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு பொங்கல் பரிசானது ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பிரச்சாரத்தின் இடையே ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளை அவர் திறந்துவைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
