நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அபார்(APAAR) என்ற பெயரில் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்’ திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமல்படுத்த இருக்கிறது.
தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர்..! மதுவிற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு! முதல்வரை விளாசிய ஆர்.பி. உதயகுமார்!
சுனாமி, கஜா புயல், கொரோனா காலங்களில் கருணையின் அடையாளமாக அம்மாவின் அரசு இருந்தது. ஆனால் இன்றைக்கு கருணையே இல்லாத ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! 18ம் தேதி சூரசம்ஹாரம்! விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
கலியுகக் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பதவி உயர்வு? 20ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை! பள்ளிக் கல்வித்துறை முயற்சிக்கு ஐபெட்டோ பாராட்டு!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பனுடன் வெள்ளிக்கிழமை(10.11.2023) இரவு அலைப்பேசியில் மனம் திறந்து உரையாடிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரும் வழக்கு! சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.
