Monday, July 7, 2025
Home Blog Page 147

செறிவூட்டப்பட்ட அரிசிப் பையில் எச்சரிக்கை வாசகம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த அரிசியை உண்ண வேண்டும். எனவே, இதுகுறித்த எச்சரிக்கை வாசகம் அந்த அரசி வழங்கப்படும் பைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆனால், அதுபோனற் எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

எனவே, சட்டவிதியின்படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரசி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த அரிசி அடைக்கப்பட்டுள்ள சாக்குப் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சாக்குப் பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படித் தெரியும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

வாட்ஸ்அப்-பில் புது அப்டேட்! ஸ்கிரீன் ஷேரிங்; Google Meet, Zoom போல குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்!

சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் என்னும் புதிய அப்டேட்டை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குரூப் அழைப்பும் செய்ய முடியும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை இன்ஸ்டால் வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி! கண்ணியமற்ற நடத்தை என கொந்தளிக்கும் பாஜக பெண் எம்.பி.க்கள்!

மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

Aadi Krithigai! ஆடிக் கிருத்திகை விரதமுறை, பலன்கள்! முருகப்பெருமானின் மூல மந்திரம்!

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு, ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடிக் கிருத்திகை”.

குடிநீர் வசதியை செய்து கொடுப்பதில் கூட பாரபட்சம்! பட்டியலின மக்களை விடியா திமுக அரசு வஞ்சிப்பதாக ஈபிஎஸ் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்று சொல்வார்கள். இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம் கூட இருப்பதில்லை.

ஆயிரம் பேருந்துகளை வாங்க ஒரே டெண்டர்! ஐயங்களை ஏற்படுத்துவதாக பா.ம.க. கண்டனம்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக, தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்! காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

antalya bayan escort