இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 7ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடும் உயர்வு! வருவாய்க்காக மக்களை கசக்கிப் பிழிவதா என மருத்துவர் ராமதாஸ் கண்டனம்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக்கட்டணமும், கட்டுமானத்துக்கு 4% பதிவுக்கட்டணமும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக 9% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையோடு ஒத்துப்போகும் உயர்கல்வித்துறை பொதுப்பாடத்திட்டம்! கொந்தளிக்கும் பேராசிரியர்கள்!
தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி, இந்த ஆண்டு முதலே பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
நிலம் தமிழர்களுடையது! வேலையோ வட இந்தியர்களுக்கு! NLC முறைகேடு பற்றி விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!
“நீரின்றி அமையாது உலகு” என்ற காலம் மாறி, “கடனின்றி அமையாது உலகு” என்ற நிலை வந்துவிட்டது. நாடே கடனாளியாக இருக்கும்போது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?. தனி மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், லட்சம், கோடிகளில் கடன் பெற்று கடனாளியாக இருக்கின்றனர்.
பாலியல் உறவுக்கு அழைக்கிறார்; கொலை மிரட்டல் விடுக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்திரி தேவி என்பவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் அவர் அளிக்கவுள்ள பாலியல் புகாரில், நான் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.