எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபடுவோம். அதேநேரம் எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குல தெய்வத்தைத்தான். சிலர் அவரவருக்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவார்கள். அதனை இஷ்ட தெய்வ வழிபாடு என்பார்கள்.
ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்க சாதி தடையில்லை! ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்தது!
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப, 2018-ல் கோயில் செயல் அலுவலர் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோயிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றிவரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
NLCக்கு எதிராகப் போராடிய அன்புமணி ராமதாஸ் கைது! போலீஸார் – பாமக தொண்டர்கள் இடையேயான மோதலால் பதற்றம்!
என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பாமகவினர் மீது போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.