அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.
மத்திய அரசின் விவசாய வளர்ச்சி நிதி திமுகவுக்கு செலவிடப்படுகிறதா? முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி!
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மத்திய அரசால் ஒதுக்கப்படுகிற ஆத்மா திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுக்களில், அனைத்து மட்டங்களிலும், விவசாயிகள் பெயரில் திமுக நிர்வாகிகளே இடம்பெற்றுள்ளனர்.
பள்ளிக்கூடமா? சித்திரவதைக்கூடமா? ஆசிரியர்கள் உரிமைக்காக குரல் கொடுப்போம் வாரீர்..! ஐபெட்டோ அண்ணாமலை அழைப்பு!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான வா. அண்ணாமலை, ஆசிரியர் சங்கங்களே..! என்று தலைப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஆசிரியர் சங்கங்களே..! நாமெல்லாம் ஒரு மண்ணில் படர்ந்த கொடிகள்! ஒரு கொடியில் பூத்த மலர்கள்..! ஒரு மலரில் விரிந்த இதழ்கள்..! ஒரு இதழில் ஓடும் நரம்புகள்..! என்பதை நம்மால் மறுக்க முடியுமா..? மறக்கத்தான் முடியுமா..?
NLC விரிவாக்கப்பணி! தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் அழிக்கப்படும் பசுமை வயல்கள்!
நெய்வேலி அருகே புவனகிரி ஒன்றியம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பணம் மட்டுமே குறிக்கோள்! இது புத்திசாலித்தனமான அரசா? கோவை மாவட்ட செயலாளர் ஆடியோவால் திமுகவில் பெரும் சலசலப்பு!
கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சிப்பதாக அந்த ஆடியோ உள்ளது. அதில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அரசு கொடுத்த 21 வகையான பொருட்களின் தொகுப்பை மக்கள் விரும்பவில்லை, அதிமுக ஆட்சியில் கொடுத்தது போல பெண்கள் பணத்தை எதிர்பார்த்தார்கள்.
பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா உள்ளது! எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து மோடி கடும் விமர்சனம்!
‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினரைத் “திக்கற்றவர்கள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.