சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர்களான ராஜ் & டிகே(Raj and DK) இயக்கத்தில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கும் OTT சீரிஸுக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்ப அலை! மேலும் உயரும் என்கிறது வானிலை மையம்!
கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. மார்ச் மாதமா? அல்லது மே மாதமா? என்கிற அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இயல்பான வெப்ப நிலையை விட 4.5℃ வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வரையறுத்துள்ளது (IMD).
1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பத்தை தீர்த்தது தமிழக அரசு!
கரோனா தொற்று பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக டிசம்பர் பாதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அண்மையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய குறிப்பாணையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும்” என்று அறிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்திலும் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
மேலும், 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 1-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! 2014-ல் இருந்ததுபோல் வரி வசூலியுங்கள்!
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
அதிகரிக்கும் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்! அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் – நடந்துநர்கள்!
அரசுப் பள்ளி மாணவர்கள் பலரது ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு! என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? ஏற்குமா தமிழக அரசு?
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார் . அப்போது பேசிய அவர், உலகளாவிய சூழ்நிலையால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.
4 மொழிகளில் ஓடிடி-யில் வெளியாகிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!
1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு – காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.