தமிழக அரசின் பாடத்திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இரு மொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
மின்வெட்டுக்குக் காரணம் என்ன? அரசுக்கு முன்யோசனை இல்லையா? என்ன சொல்கிறார் எடப்பாடி?
மின்வெட்டு தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.
வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க முயற்சிக்கும் மாணவர்கள்! தகாத வார்த்தைகளால் மிரட்டல்!
திருப்பத்தூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், ஆசிரியரை மாணவர்கள் அடிக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் பாதுகாப்பு விவகாரம்! திமுக – அதிமுக – பாஜக இடையே கடும் மோதல்! என்ன சொல்கிறார் முதல்வர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்து பின்னர் வெளிநடப்பு செய்தது.
SBI-ஐ தொடர்ந்து வட்டியை உயர்த்தும் மற்ற வங்கிகள்! எந்தக் கடனுக்கு EMI அதிகமாகப் போகிறது?
எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரித்துவிட்ட நிலையில், மற்ற வங்கிகளையும் வட்டியை உயர்த்த முடிவுசெய்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
இரவோடு இரவாக மாற்றப்பட்ட தலைமைச் செயலாளர்! அடுத்து ஆளுநரா? அமித் ஷா வருகையால் பரபரக்கும் புதுச்சேரி!
புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் வழக்கமான மாறுதல் தான் இது என்று சொல்லப்பட்டாலும், அரசியல் பின்னணியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்! மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சி! ஆளுநர் சூரியனைப்போல இருப்பதாக தருமபுர ஆதீனம் பாராட்டு!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்த ஆளுநர் ரவி, கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.