தமிழ்நாட்டில் பேருந்து மற்றும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
ரஷ்ய தாக்குதலின் காட்சிகள்! 13-வது நாளாக நீடிக்கிறது போர்! 10ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
காதலரை மணம் முடித்த அமைச்சர் சேகர் பாபு மகள்! பெங்களூரு போலீசில் தஞ்சம்! அச்சுறுத்தல் இருப்பதாக பேட்டி!
காதலரை திருமணம் செய்து கொண்ட, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பெங்களூரு காவல்துறையை அணுகியுள்ளார்.
ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கலாம்! ஓலாவுக்கு டஃப் கொடுக்கும் ‘சிம்பிள் ஒன்’! சாதக, பாதகங்கள் என்னென்ன?
ஓலா, ஏதர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் களமிறங்குகிறது இந்திய தயாரிப்பான ’சிம்பிள் ஒன்’. ஆனால் விலையோ….!
அண்ணாமலைக்கு பொறுப்பு இல்லையா? பழிபோடுவது சரியா? குமுறும் பாஜகவினர்!
நகர்ப்புபற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், பாஜகவில் கிட்டத்தட்ட 8 மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே காரணம் என்பது போன்றதொரு கண்ணோட்டத்தை இது ஏற்படுத்துவதாக பாஜகவினர் பொருமுகின்றனர்.
திமுக-வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! கூட்டணி தர்மத்தை மீறியதாக புகார்! ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!
கூட்டணி தர்மத்தை மீறியதால், பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், திமுகவைக் கண்டித்தும் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.