‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’ (Thudikkum Karangal). இது 1983-ம் ஆண்டு ரஜினி நடித்த படத்தின் டைட்டில். மும்பையை சேர்ந்த மணிஷா கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார்.
அதிமுக சாதனைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடலா? முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!
அதிமுக சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை திமுக-வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்வதுதான் ‘திராவிட மாடல்’ போலும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! மாநில அரசுகளைக் கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியாது!
குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது.
பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை! ஜெ. சிந்தனைக்கு கிடைத்த வெற்றி! ஓபிஎஸ், ஈபிஸ் பெருமிதம்!
30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
குஜராத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு! முக்கிய தலைவர் விலகல்! ராகுல் மீது கடும் விமர்சனம்!
படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு போராட்டங்களை தலைமை ஏற்று நடத்திய ஹர்திக் படேல், மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரைக் கட்சியில் சேர்த்தார்.
