மொழிப் பிரச்சனையை கிளப்பிவிட்ட சோமாட்டோ, அதனை மறக்கடிப்பதற்காக கவர்ச்சிகர ஆஃபர்களை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், Zomatoவுக்கு எதிரான வினையாற்றல்களுக்கு பதிலளித்துள்ள அந்நிறுவன சிஇஓ, இது தேசியப் பிரச்சனையா? என கேட்டுள்ளார்.
தமிழகத்தில் ரூ.100-ஐத் தாண்டிய டீசல் விலை! பெட்ரோல் லிட்டர் ரூ.102ஐத் தாண்டியது! வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி!
சென்னையில் பெட்ரோல் விலை 102ஐக் கடந்த நிலையில், கடலூரில் டீசல் விலை லிட்டர் 100ஐத் தண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக ஏற்க இயலாது! இந்தியாவுக்கு ஒரு தலைவர் இருக்க முடியாது! அடுத்த சர்ச்சைக்கு வித்திட்ட சாவர்கர் பேரன்!
மகாத்மா காந்தியை தேசத்தந்தை என நினைக்கவில்லை எனவும், இந்தியா போன்ற நாட்டுக்கு ஒரு தலைவர் மட்டும் இருக்க முடியாது என்றும் வி.டி. சாவர்கர் பேரன் ரஞ்சித் சாவர்கர் கூறியுள்ளார்.
காந்தி சொல்லித்தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு அளித்தார்! ராஜ்நாத் சிங் கருத்தால் வெடித்தது சர்ச்சை!
மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் கருணை கோரி கடிதங்களை எழுதினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையாகியுள்ளது.
புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது திமுக! அதிமுக-வினரின் வெற்றி சான்றிதழை வழங்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்றது என குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க., சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.
