வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை, என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தம்மை எதிர்க்க வலுவான போட்டியாளர் இல்லாததால், வெற்றி சுலபமாக ‘கைகூடி’விட்டதை எண்ணி அமைச்சர் நமசிவாயம் உற்சாகத்தில் உள்ளார்.
கோவிட்-19லிருந்து மீண்ட ‘Gopi’-யின் அனுபவம்! அசத்தலான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை! தைரியமே முதல் மருந்து!
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்வதே இந்த பதிவு. இதன் மூலம், வாசகர்களாகிய உங்களுக்கு கோவிட்-19 மீதான அச்சம் நீங்குவதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை அதிகமாகும்.
தமிழகத்துடன், புதுச்சேரியை இணைக்க விரும்புகிறாரா நாராயணசாமி? மக்கள் மத்தியில் பீதி!
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கூறிவருகிறார். ஒரு மாநில முதலமைச்சரே இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.
ஆங்கிலேயர்கள் எழுதிய நூலை மேற்கோள்காட்டுகிறார் திருமாவளவன்! மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்!
திருமாவளவன் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச்செய்துள்ளது என்று பா.ஜ.க., துணைத்தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார்.
திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!
திமுக–வில், மகளிரணி செயலாளர் கனிமொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஆதரவு தர, மகளிரணியைத் தாண்டி தமக்கான ஆதரவு வட்டம் உருவாவதால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.
புதுச்சேரியில் மொட்டு விடும் தாமரை! பாஜக-வில் இணைய ஆர்வம் காட்டும் மாற்றுக் கட்சியினர்!
புதுச்சேரியில் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே இருந்த பாஜக, தற்போது, தொண்டர்கள் மட்டத்திலும் செல்ல ஆரம்பித்துள்ளது. மாற்றுக்கட்சியினர் பலரும் பாஜக–வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்து வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் திருமாவளவன் முக்கியமா? ஸ்டாலினை கேள்வி கேட்கும் திமுக-வின் அடிமட்டத் தொண்டன்!
வணக்கம் தலைவரே! கட்சியில் இருக்கும் சொரணையற்ற இந்துக்களில் ஒருவன் எழுதுவது! மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். குடும்பச் சுமையை உதயண்ணாவிடமும், கட்சிச் சுமையை மருமகன் சபரீசன் மற்றும் பிரசாந்த் கிஷோரிடமும் கொடுத்துவிட்டீர்கள். அறிக்கை எழுத திருமாவேலன் போன்றோர் இருக்கிறார்கள்.
