புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகளை நாளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளிகளை திறக்கவிடாமல், போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் என்ன சாதித்தார் புதுச்சேரி எஸ்.பி. சிவக்குமார்! வேல்ஸ் மீடியா பிரத்யேக அலசல்!
புதுச்சேரி திமுக–வின் முகமாக அறியப்படுபவர் எஸ்.பி. சிவக்குமார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீதான ஈர்ப்பால், மாணவர் பருவம் முதலே, அவரது அடியொட்டி நடக்கத்தொடங்கி, அரசியலில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இன்டோர் ஸ்டேடியத்தை மட்டும் திறக்க அனுமதித்தது யார்? நிர்வாக அதிகாரியின் முறைகேடுக்கு துணைபோகிறதா புதுச்சேரி அரசு?
புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் மட்டும் விளையாட அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி, வெளி விளையாட்டு அரங்கில் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள் விளையாட்டு அரங்கம் எனப்படும் இன்டோர் ஸ்டேடியம் மூலம் கொரோனா பரவாதா என்பதே வீரர்களின் கேள்வியாக உள்ளது.
கட்சி மாறப்போவதாக வெளியான தகவல் தவறு! அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாக அமைச்சர் நமசிவாயம் விளக்கம்!
காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையப்போகவதாக வெளியான செய்தி தவறு என்று அமைச்சர் நமசிவாயம் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு புதிய போலீஸ் அதிகாரி நியமனம்! சந்தேகம் எழுப்பும் ஐ.ஜி. டிரான்ஸ்ஃபர்! பெரும் குழப்பத்தில் காவல்துறையினர்!
புதுச்சேரியில் காவல்துறை ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரி, என்னவாக பதவியேற்பார் என்பதே காவல்துறையினரின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஓபிஎஸ் தயார்! கட்சியை முழுமையாக ஒப்படைக்க நிபந்தனை! ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி!
எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் மன நிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் வந்துவிட்டார். ஆனால், கட்சியை முழுமையாக தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் அவர், சட்ட ரீதியாக இதைச் செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
த.மா.கா.வில் இணைகிறார் நமசிவாயம்! தேர்தலில் என்.ஆர்-உடன் கூட்டணி! வன்னியர்களை புறக்கணிப்பதால் ஆவேசம்!
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், அமைச்சருமான நமசிவாயம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி வன்னியர்களை ஒதுக்குவதால், தான் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம் கருதி, அவர் கட்சி மாறும் முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
