ஏ.எஃப்.டி. மில்லை மூடாமல், அரசு அதனை புணரமைக்க வேண்டும் என கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டிவிடும் திமுக! சிவா எம்.எல்.ஏ. கையிலெடுக்கும் ‘தட்டாஞ்சாவடி ஃபார்முலா’!
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் மீது திமுக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. வரும் தேர்தலுக்காக, திமுக மாநில அமைப்பாளரும்(தெற்கு), எம்.எல்.ஏ.வுமான சிவா போடும் கணக்கால், காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் இருக்கிறது.
புதிய கல்விக்கொள்கை! ஸ்டாலினுக்கு சாமானியனின் அடுக்கடுக்கான கேள்விகள்!(Part-1)
புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு நிகராக, ஏழை வீட்டு பிள்ளைகள் கல்வி பெறக்கூடாதா என சாமானியர்கள் கேட்கின்றனர். அவர்களில் ஒருவர் எழுதியுள்ள கடிதம்தான் இது.
வழக்கறிஞர் சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம்! முதலியார்பேட்டையில் போட்டியிடுவது உறுதி என சம்பத் சூளுரை!
புதுச்சேரியில் உள்ள பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத்தை வளைக்க முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது உறுதி எனக்கூறும் எல். சம்பத், எந்தக் கட்சியில் இணைவது என முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறார் ஸ்டாலின்! #NEP2020 விவகாரத்தில் பா.ஜ.க. அடுக்கடுக்கான கேள்வி
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை, சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம், மு.க. ஸ்டாலின் சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார்.