புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ‘விசிசி’ நாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள்! சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி!
பெரும் தொழிலதிபரான எஸ். வைகுண்டராஜனுக்கும், அவரது சகோதரர் எஸ். ஜெகதீசனுக்கும் இடையேயான சொத்துப் பிரச்னையால், அவர்களது குழும ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இயங்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
புதுச்சேரி ‘பாஜக’-வை கம்பெனி போல நடத்தும் சாமிநாதன்! ‘VCC’ நாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் பாஜக–வை கம்பெனி போல நடத்துவதாக விசிசி நாகராஜன் குற்றம்சாட்டுகிறார். மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பாலசிங்கத்தை நிராகரித்த பிரபாகரன்! பிரியங்கா – நளினி சந்திப்புக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! அதிரவைக்கும் ரகசியங்கள்!
ஆண்டன் பாலசிங்கத்தின் முக்கிய யோசனைகளை எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரன் நிராகரித்ததே போரில் எல்.டி.டி.ஈ. தோற்றதற்கு காரணமாக கூறப்படுகிறது. வடக்கு மாகாண சுயாட்சிக்கு மஹிந்த ராஜபக்ச சம்மதித்த நிலையில், பிரபாகரன் அதை ஏற்காததே, பல லட்சம் உயிரிழப்புகளுக்கும், இலங்கை தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.
நீட் தேர்வால் தற்கொலைகள் ஏன்? அனிதா மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்ம முடிச்சுகள்!
நீட் தேர்வு தொடர்பான சில கருத்துகளை மக்கள் மன்றத்தில் வைப்பதற்கான பதிவுதான் இது. நீட் தேர்வெழுதவுள்ள மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள், அனிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பதை விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர் டாக்டர் பெரியசாமி. நீட் பற்றிய புரிதலுக்கும், உண்மையை அறியவும் இந்தப் பெரிய பதிவு அவசியமாகிறது.
அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்! புறக்கணிக்கப்படும் பட்டியல் வகுப்பினர்!
திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.
ஆன்லைன் வகுப்புகளால் விபரீதம்! பாதிக்கப்படும் ஆசிரியர்கள்! மாணவர்களுக்கும் பேராபத்து?
கொரோனா காலத்தில், குழந்தைகளின் ஆன் லைன் வகுப்பு பற்றி கவலைப்படும் நீங்கள், எத்தனை மன அழுத்தத்துக்கு இடையே, ஆசிரியர்கள் ஆன் லைன் வகுப்புகளை எடுக்கிறார்கள் என கவலைப்பட்டதுண்டா? ஆசிரியர்களுக்கான மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளுடன், வேல்ஸ் மீடியா எப்போதும் அவர்களுக்காக தோள் கொடுக்கும் என்பதை உரக்கச் சொல்லவே இந்தக் கட்டுரை.
