வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராகிங்கில் ஈடுபட்டதாக சீனியர் மாணவர்கள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1
1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.
மணவெளி தொகுதியில் சிவா! என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!
திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ–வுமான சிவா, மணவெளி தொகுதியை நோட்டமிடுவதாக தெரிகிறது. என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில், தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்து வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் திருமாவளவன் முக்கியமா? ஸ்டாலினை கேள்வி கேட்கும் திமுக-வின் அடிமட்டத் தொண்டன்!
வணக்கம் தலைவரே! கட்சியில் இருக்கும் சொரணையற்ற இந்துக்களில் ஒருவன் எழுதுவது! மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். குடும்பச் சுமையை உதயண்ணாவிடமும், கட்சிச் சுமையை மருமகன் சபரீசன் மற்றும் பிரசாந்த் கிஷோரிடமும் கொடுத்துவிட்டீர்கள். அறிக்கை எழுத திருமாவேலன் போன்றோர் இருக்கிறார்கள்.
கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் போனஸ்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெயா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.
ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ‘கூழாங்கல்’ திரைப்படம்! தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம்!
ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கட்சி இப்போதைக்கு இல்லை! வாக்குகள் இருந்தால் பணம் ரெடி! பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸுக்கு என்னைவிட, கட்சித் தலைமையே முக்கியம்’ எனக் கூறி, காங்கிரஸின் பேச்சுவார்த்தையிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.
