சென்னை, கோவை, நாகை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 45 இடங்களில் தேசிய புலனாய்வு ( என்.ஐ.ஏ.,) படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நடந்த கார்குண்டு வெடிப்பு காரணமாக இது தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது. அதிகாலை 4.20 மணி முதலே சோதனை நடந்து வருகிறது.
#cmcvellore | வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராகிங்கில் ஈடுபட்டதாக சீனியர் மாணவர்கள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
முன்னாள் ஐ.ஜி. ஜாபர் சேட், கருணாநிதியின் செயலாளர் குடும்ப சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறை அதிரடி!
சட்டவிரோதமாக அரசிடம் வீட்டு மனை பெற்று, அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி உட்பட 3 பேரின் 14.23 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிப்பு!
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வரும் 11-ம் தேதி 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடி! சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம், துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள்!
தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் நிறுவனங்கள்! 69% இட ஒதுக்கீடுக்கு மூடு விழாவா என ஈபிஎஸ் கேள்வி?
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடர்கதையாகி வருகிறது.
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகிறது! இன்றே பல இடங்களில் கனமழை! 11, 12ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும்!
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே மழை தொடங்கியுள்ளது.