நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும், அதில் 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.
மதம் மாறாவிட்டால் கொன்றுவிடுவோம் என பாஜக மிரட்டுகிறது! SC/ST இந்துக்கள் இல்லை! காந்தி தீவிர இந்துத்துவவாதி!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், கடந்த மாதம் 24-ந் தேதி அம்பேத்கர் சேவா சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘’அம்பேத்கரை சாதித் தலைவராக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் விரும்பிய தேசத்தை உருவாக்க வேண்டும்.
மாநிலத்தில் கூட்டாட்சி..! மாவட்டங்களில் சுயாட்சியா..? குழப்பத்தில் கல்வித்துறை! கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அன்றாடம் அளித்துவரும் பேட்டிகள் தெளிந்த உள்ளத்திலிருந்து வரும் கருத்து பிரதிபலிப்பாக அமையவில்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
திமுக அரசு வணிகர் நலனை காக்கிறது – மு.க. ஸ்டாலின்! வணிகர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி!
திருச்சியில் வணிகர் விடியல் மாநாட்டில் முதவமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
அக்கா குருவி திரை விமர்சனம்! உணர்வுப்பூர்வமாக நகரும் காட்சிகள்! ‘சாமியா’ இப்படி?
உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி, முற்றிலுமாக வேறுபட்டு, இரு குழந்தைகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தான் ‘அக்கா குருவி’. உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம் தான் இப்படம்.
கட்சி இப்போதைக்கு இல்லை! வாக்குகள் இருந்தால் பணம் ரெடி! பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், 2024 தேர்தல் தொடர்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸுக்கு என்னைவிட, கட்சித் தலைமையே முக்கியம்’ எனக் கூறி, காங்கிரஸின் பேச்சுவார்த்தையிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகினார்.