விசாரணை சிறைவாசி விக்னேஷின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? என கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப்போகிறார்? என வினவியுள்ளார்.
உ.பி.யைத் தொடர்ந்து குஜராத் கல்வி மாடல்! இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு ஆசிரியர்கள் கேள்வி?
திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்று மே 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் உத்தரப்பிரதேச கல்வி நிர்வாக அமைப்பு தமிழ்நாட்டிலிருந்து இன்னமும் ரத்து செய்யப்படவில்லையே? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஆதீனம் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு! பின் வாங்குகிறது தமிழக அரசு? சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் என பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.