Thursday, February 19, 2026
Home Blog Page 117

தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு எனக் கூறுவதா? அடையாளத்தை மறைப்பதா எனவும் ஐகோர்ட் கேள்வி!

தமிழுக்கான கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! பிணையே கிடைக்காது! தனிமனித உரிமைகளை மீறும் சட்டத்திருத்தம்!

தனி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் ‘குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்’ கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டிருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்!

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 13 கிராமப்பகுதியில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஈ.வெ. ரா., அண்ணாதுரை தொடங்கிவைத்த ஒழுங்கீன அரசியல்! நாகரீகமற்ற பேச்சுக்கு கட்சியினரை பழக்கும் பாஜக தலைவர்!

.வெ. ராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாதுரை போன்றவர்கள் தோற்றுவித்த, ‘அரசியலில் தனி நபர் தாக்குதல்இப்போது வரையிலும் தொடர்கிறது. நாகரீகமற்ற அரசியல் போக்கையே, தற்போதைய தலைமுறை அரசியல்வாதிகளும் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர், 6 நிமிடம் மூச்சை அடக்கும் திறன்! யானைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்! World Elephant Day!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.

தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாமா? நிபுணர்களின் பதில் என்ன?

ஆரோக்கிய வாழ்விற்காக தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை போதுமானதா? மருத்துவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையா? என்ற கேள்விகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உணவுப்பழக்கங்களால் தேவைப்படும் சத்துகள் குறைவாக கிடைப்பதால், பலரும் வைட்டமின் மற்றும் தாதுக்களால் நிரம்பிய சப்ளிமென்டுகளை தினசரி எடுத்துக்கொள்கின்றனர்.

மின்டெல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் வழக்கமாக வைட்டமின் மாத்திரைகள் அல்லது சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் தங்களிடம் எந்த சத்துப் பற்றாக்குறையும் இல்லாதபோதும், உடல்நலம் மேம்படுமேனும் நம்பிக்கையோடு இதை பயன்படுத்துகிறார்கள்.

Also Read : நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?

 வைட்டமின் மாத்திரைகள் – உண்மையான தேவை இருக்கிறதா?

13 அடிப்படை வைட்டமின்கள் நம் உடலுக்கு தேவை. அவற்றை உணவிலிருந்து பெற முடியாதபட்சத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வது ஆலோசிக்கப்படுகிறது. எனினும், இதற்கான மருத்துவ பரிசோதனை இல்லாமல் எடுத்துக்கொள்ளுவது பல நேரங்களில் தேவையற்றதும், இடையூறு உண்டாக்கக்கூடியதுமான முடிவுகளை தரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 வைட்டமின்களின் வகைகள்:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: A, D, E, K – உடலில் சேமிக்கப்படுவதால் அதிக அளவில் எடுத்தால் சிக்கல்கள் ஏற்படலாம்.

நீரில் கரையும் வைட்டமின்கள்: B குழு, C – சேமிக்கப்படாது. தேவையை விட வைட்டமின் சி அதிகமாக எடுத்தால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

Also Read : வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects

 உணவிலிருந்து கிடைப்பதே போதுமானதா?

பல்வேறு வகையான மல்டிவைட்டமின் மாத்திரைகள் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களையும் கொண்டிருப்பதால், உணவிலிருந்தே இவை கிடைக்கவில்லையெனில் மாத்திரைகள் ஒரு மாற்றுத் தேர்வாக இருக்கலாம்.

உதாரணமாக:

  • கால்சியம் – தினமும் 700 mg தேவை.
  • துத்தநாகம் (Zinc) – ஆண்களுக்கு 9.5 mg, பெண்களுக்கு 7 mg தேவை.
  • இரும்புச்சத்து – பெண்களுக்கு 14.8 mg, ஆண்களுக்கு 8.7 mg தேவை.

❖ யாருக்கெல்லாம் சப்ளிமென்ட் தேவைப்படும்?

  • வயதானவர்கள், வீட்டிலேயே இருப்பவர்கள் – வைட்டமின் D மற்றும் கால்சியம்.
  • சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் – B12 மற்றும் கால்சியம்.
  • பசி குறைவோடு வலுவிழந்தவர்கள் – மல்டிவைட்டமின் மாத்திரைகள்.
  • மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்கள் – இரும்புச்சத்து (மருத்துவரின் ஆலோசனையுடன்).
  • கர்ப்பிணிகள் – ஃபோலிக் அமிலம் (மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில்).

❖ வைட்டமின் சி – உண்மையான சூப்பர் ஹீரோவா?

வைட்டமின் C ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகளால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என நம்பப்படுவதாலும், காய்ச்சல், சளி போன்றவற்றை தடுக்கும் என சொல்லப்படுவதாலும், மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை தொடர்பான நிரூபணங்கள் மிகவும் குறைவானவை. ஒரு நெல்லிக்காயில் 100-600 mg வரை விட்டமின் சி இருக்கிறது. இதனால், இயற்கையான பழங்கள், காய்கறிகள் மூலம் தினசரி தேவையைப் பெற முடியும்.

Also Read : மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்!

 Bottom Line:

நிபுணர்கள் கூறுவதாவது:

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், விட்டமின் D தவிர மற்ற அனைத்தும் உணவிலிருந்து பெற முடியும்.
  • உணவில் சிலவற்றை தவிர்ப்பவர்கள், குறிப்பிட்ட சத்துக்களுக்கு மாத்திரை எடுக்கலாம்.
  • தவிர, ஒரே மாத்திரையால் எல்லா சிக்கல்களும் தீரும் என்பது தவறான எண்ணம்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த சப்ளிமென்டும் தொடர்ந்து எடுக்க வேண்டாம்.

சுயமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைவிட, சமச்சீர் உணவுப்பழக்கத்துடன், நிபுணர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவதே நீண்டகால ஆரோக்கியத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort