கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என்றும் வேளாண் பொறியியல் உள்பட 4 படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
தெலுங்கு வருடப்பிறப்பன்று திறக்கப்படுகிறது டெல்லி திமுக அலுவலகம்! மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை சந்திக்க இருக்கிறார்.
அண்ணாமலை பல்கலை. தொலைதூர படிப்புக்கு அங்கீகாரமில்லை! மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது.
சீருடையுடன் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் பட்டியலின மாணவி! கல்வித்துறை விசாரிக்க கிராம மக்கள் கோரிக்கை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அந்தப் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பட்டியலின அதிகாரியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சர்! இதுதான் திராவிட மாடலா?, சமூக நீதியா? என கொந்தளிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதிப் பெயரை கூறி திட்டியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
80 வருட பயணம், காலத்துக்கேற்ற மாற்றம்! தற்போது முற்றிலும் டிஜிட்டலில் “கலக்குது கல்கி குழுமம்”!
கல்கி…! தமிழ் அறிந்தோர் அனைவருக்கும் நன்கு பரிச்சயம் ஆனதொருப் பெயர். ’கல்கி’ என்றவுடன் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற அமரர் கல்கி எழுதிய புதினங்களோடு அவர் வித்திட்ட கல்கி குழுமமும் கல்கி வார இதழும் அவசியம் நம் நினைவிற்கு வரும்.
மாநில நன்மைக்காக ஸ்டாலின் துபாய் செல்லவில்லை! குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என எடப்பாடி கேள்வி!
துபாய் சர்வதாச கண்காட்சி முடியும் தருவாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.